ஏற்காடு கோடை விழா : சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஏற்காடு கோடை விழா  : சேலத்தில் இருந்து  சிறப்பு பஸ்கள் இயக்கம்

சிறப்பு பேருந்து 

ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு சேலத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் ரூ.300 பேக்கேஜ் கட்டணத்தில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்யலாம்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 47-வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வருகிற 22-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக தினமும் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஏற்காடு ஏரி, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் 3 உள்வட்ட சிறப்பு பஸ்களும் கோடை விழாவையொட்டி இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏற்காடு கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேக்கேஜ் பஸ் புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய இடங்களை கண்டு கழித்து மீண்டும் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 7 மணிக்கு பேக்கேஜ் சிறப்பு பஸ் வந்தடையும்.

இந்த சிறப்பு பஸ்சுக்கு ஒரு பயணிக்கு ரூ.300 கட்டணம் ஆகும். பயணிகளின் வசதிக்காக பேக்கேஜ் பயணத்திற்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையத்தளம் (www.tnstc.in) மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story