காலதாமதமாக பூத்த மாம்பூவால் விளைச்சல் பாதிப்பு

பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மா மரங்களில் தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காலதாமதமாக பிப்ரவரி மாதத்தில் மா பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. இதனால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கமாக மா மரங்களில் பூ பூக்கும். ஆனால் இந்த நடப்பு பருவத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காலதாமதமாக பிப்ரவரி மாதத்தில் மா பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. இதனால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கோடை வெயில், பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் பகுதிகளில் அல்போன்சா, பீத்தர், மல்கோவா, நீலம், பங்கன்பள்ளி மாம்பழங்கள் உற்பத்தி யப்படுகிறது. தற்போது மா உற்பத்தி கடுமையாகபாதிக்கும் சூழ்நிலையில் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story