சிவராஜ் குழுமம் சார்பில் யோகாசன பயிற்சிவகுப்பு: எம்பி தொடங்கி வைப்பு

சிவராஜ் குழுமம் சார்பில் யோகாசன பயிற்சிவகுப்பு: எம்பி தொடங்கி வைப்பு

யோகா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்த எம்பி

சேலம் சிவராஜ் குழுமம் சார்பில் யோகாசன பயிற்சி வகுப்புகள் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

ரிஷி ஹெல்த்கேர் (ஆயுஷ் கிளினிக்), சிவராஜ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி ஆகியவை சார்பில் யோகாசன பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா சேலம் ஜங்ஷன் சாலையில் உள்ள சிவராஜ் இன் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு யோகாசன பயிற்சி வகுப்பை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இது குறித்து சிவராஜ் குழும நிர்வாகிகள் கூறும் போது,‘சேலத்தை தலைமையிடமாக கொண்டு பல தலைமுறைகளாக மருத்துவ சேவை செய்து வருகிறோம்.

தற்போது எங்கள் குழுமத்தின் மற்றொரு அங்கமான ரிஷி ஹெல்த்கேர் மற்றும் சிவராஜ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி இணைந்து யோகாசன பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

இதில் அனுபவமிக்க இயற்கை மற்றும் யோகா டாக்டர்களால் நேரடியாக யோகாசன பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்றார்கள். இந்த நிகழ்ச்சியில் சிவராஜ் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ரிஷி ஹெல்த் கேர், சிவராஜ் இன் ஓட்டல் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story