யோகா கலாச்சாரப் போட்டி
கிருஷ்ணகிரியில் நேச்சுரல் யோகா அசோசியேஷன் சார்பில் 3வது தேசிய அளவிலான யோகா ஒருங்கிணைப்பு கலாச்சாரப் போட்டி நடைபெற்றது
கிருஷ்ணகிரியில் நேச்சுரல் யோகா அசோசியேஷன் சார்பில் 3வது தேசிய அளவிலான யோகா ஒருங்கிணைப்பு கலாச்சாரப் போட்டி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரியில் நேச்சுரல் யோகா அசோசியேசன் சார்பில் 3வது தேசிய அளவிலான யோகா ஒருங்கிணைப்பு கலாச்சார போட்டிகள், கிருஷ்ணகிரி அடுத்த சிவகாமியம்மாள் கலைக்கல்லூரியில் நடைபெற்றது இந்த கலாச்சார போட்டிகளை திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.சி.ஆர் தினேஷ்ராஜன் முன்னிலையில், தமிழ்நாடு யூத் யோகா சங்க மாநிலத் தலைவர் யோகா ஆச்சார்யா பாரஸ்மால் மற்றும் சிவகாமி அம்மாள் கல்வி நிறுவன தலைவர் என்.குமரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக தப்பாட்டம் மற்றும் கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவ மாணவிகளுக்கு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் யோகா குறித்த சந்தேகங்களும் விலக்கப்பட்டன. யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு யோகா ஆச்சாரியா மற்றும் சிவகாமி அம்மாள் கல்வி நிறுவன தலைவர் என்.குமரன் மற்றும் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.சி.ஆர்.தினேஷ்ராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த இனிய நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு யூத் சங்கம், பதஞ்சலி யோகா சமதி, ஓசூர் யோகா ஆச்சார்யா, சிவகாமி யம்மாள் கல்வியியல் கல்லூரி, ஆகியோர் சார்பில் பள்ளி மாணவ மாணவர்களுக்கான யோகா பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் சிவகாமியம்மாள் கல்லூரி முதல்வர் சீனிவாசன், மற்றும் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், சிவகாமியம்மாள் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.