திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் குமரன் மகளிர் கலைக்கல்லூரியில் யோகா தினத்தை முன்னிட்டு, மாணவிகளுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி நிர்வாக அலுவலர் நிர்மல் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வசந்தி முன்னிலை வகித்தார். தனியார் யோகா பயிற்சியாளர் பவித்ரா தேவி கலந்துகொண்டு மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோமதி, நிர்மலா தேவி, தேவிபிரியா, கோமணவள்ளி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story