திண்டிவனம் அருகே தனியார் கல்லூரியில் யோகா தின விழா கொண்டாட்டம்

திண்டிவனம் அருகே தனியார் கல்லூரியில் யோகா தின விழா கொண்டாட்டம்

யோகா தின விழா 

திண்டிவனம் அருகே தனியார் கல்லூரியில் யோகா தின விழா கொண்டாட்டம். மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது, இதற்கு கல்லூரி முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார். தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளரும், காட்சி தொடர்பு ஊடகவியல் துறைத்தலைவருமான செந்தமிழ்ச் சோழன் வரவேற்றார். கல்லூரியின் முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார், நிர்வாக அலுவலர் சிவா, பெற்றோர்-ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராஜயோகி முத்துகுமரப்பா சிறப்புரை யாற்றினார். இதில் ராஜயோகி ரவி, திண்டிவனம் பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள், ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தியானம் மற்றும் யோகா பற்றி மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மருது நன்றி கூறினார்.

Tags

Next Story