திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாட்டம்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாட்டம்

யோகா பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 10வது சர்வதேச யோக தினம் மாணவ மாணவிகள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 10வது சர்வதேச யோக தினம் மாணவ மாணவிகள் மத்தியில் கொண்டாடப்பட்டது. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் அயராத முயற்சியால், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன் காரணமாகவும் ஜூன் 21ஆம் தேதியில் சர்வதேச யோகத்தனமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மைதானத்தில் முனைவர் பிரவீன் பீட்டர் மற்றும் முதல்வர் மரியா அந்தோணி ராஜ் தலைமையில் சுமார் ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்து அசத்தினர்.

மேலும் யோகா பயிற்சியின் சிறப்பு இன்றியமையாமை மேலும் யோகாவின் தேவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் திருப்பத்தூர் IIPA தலைவர் சுப்பிரமணியன், லயன் முனைவர் கிறிஸ்டியானந்தன்,

முன்னாள் தலைவர் லயன்ஸ் கிளப் தியோபில் ஆனந்த், முனைவர் போர்க், என்சிசி அலுவலர் சிவகுமார், யோகா ஆசிரியர்கள் தேன்மொழி மற்றும் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story