அரசு பள்ளியில் யோகா தினம்

அரசு பள்ளியில் யோகா தினம்

குமாரபாளையம் அரசு பள்ளியில் யோகாசன தினவிழா கொண்டாடப்பட்டது.


குமாரபாளையம் அரசு பள்ளியில் யோகாசன தினவிழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பள்ளியில் யோகாசன தினவிழா கொண்டாடப்பட்டது சர்வதேச யோகாசன தினத்தையொட்டி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி பள்ளியில் யோகாசன பயிற்சி முகாம் நடந்தது. தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமை வகித்தார். குமாரபாளையம் அறிவுத்திருக்கோவில், மனவளக்கலை மன்றம் சார்பில், பயிற்சியாளர்கள் பங்கேற்று, ஆசனங்கள், உடற்பயிற்சி, தவம், முத்திரைகள் உள்ளிட்ட யோகா பயிற்சி வழங்கினார்கள். இது குறித்து தலைமையாசிரியை கவுசல்யாமணி கூறியதாவது: யோகா கலையை அறிந்து தினமும் யோகா செய்வதன் மூலம் மாணவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் பாடங்களை கவனிக்கும் திறன், ஞாபகசக்தி போன்றவை அதிகரிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story