தனியார் கல்லூரியில் யோகா தினம்

தனியார் கல்லூரியில் யோகா தினம்

யோகா தினம் 

தனியார் கல்லூரியில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லுாரியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் முருகன் வரவேற்று, மாணவிகளுக்கு யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி துவக்கி வைத்தார். விழுப்புரம் மனவளக்கலை மன்ற பேராசிரியர்கள் தனஞ்செயன், தவம் ஆகியோர் சுவாச பயிற்சியை மேற்கொண்டனர்.

செயலாளர் சிவப்பிரகாசம், யோகாவின் எளிய பயிற்சி முறையை விளக்கினார். பேராசிரியர் வேணு பல்வேறு ஆசனங்கள் நிகழ்த்தி, அதன் பயன்களையும் கூறினார். மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல்வர் முரளிதரன், துணை முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கினர்.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜோன் சார்லஸ் வரவேற்றார். ஆனந்த மூர்த்தி, யோகா வரலாறு, இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணொலி மூலம் விளக்கி, பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்.

Tags

Next Story