ராமநாதபுரம்: யோகா பயிற்சி முகாம்

ராமநாதபுரம்:  யோகா பயிற்சி முகாம்

யோகா பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இலவச யோகா பயிற்சிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஹார்ட்புல்னெஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் யோக மஹோத்ஸவம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. உடல் மற்றும் மன நலனிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சியில் மூச்சு பயிற்சி, யோக முத்திரைகள், ஆசனம் ஓய்வு நிலை பயிற்சி, தியான பயிற்சி உள்ளிட்ட பலவகையான யோக நிலைகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற யோகா விழிப்புணர்வு பயிற்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story