யோகா பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, தனம் மஹாலில், ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட் ஃபுல்னெஸ் இன்ஸ்டியூட் சார்பில், யோகா பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் பயிற்சியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், மருத்துவர் டி.நீலகண்டன் தொடங்கி வைத்தனர். இரண்டாம் நாள் பயிற்சியை பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், வட்டாட்சியர் ஆர்.தெய்வானையும், மூன்றாம் நாள் பயிற்சியை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர், தனம் ஆர்.நீலகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினர்.
இந்த மூன்று நாட்கள் முகாமில் ஓய்வு நிலைப்பயிற்சி, புத்துணர்வு பயிற்சி, உள் முக ஆற்றலுடன் இணைதல் மற்றும் தியானப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெரியவர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள், குடை யோகமணி, எம்.எஸ். ரவிச்சந்திரன, எஸ்.சத்யபாமா, எஸ்.தனராஜ சேகர் செய்திருந்தனர்.