திருச்சியில் 16ம் தேதியும் வண்ணத்துப்பூச்சி பூங்காவை பார்வையிடலாம்

திருச்சியில் 16ம் தேதியும் வண்ணத்துப்பூச்சி பூங்காவை பார்வையிடலாம்

 திருச்சியில் வரும் 16ம் தேதி மாட்டுப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ணத்துப்பூச்சி பூங்கா வழக்கம்போல் செயல்படுகிறது.  

திருச்சியில் வரும் 16ம் தேதி மாட்டுப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ணத்துப்பூச்சி பூங்கா வழக்கம்போல் செயல்படுகிறது.

பூச்சி இனங்களிலேயே மிகவும் அழகானது வண்ணத்துப்பூச்சிகள். சூழலியல் பாதுகாப்பிலும், உணவுச்சங்கிலியை உறுதிப்படுத்துவதிலும் வண்ணத்துப்பூச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், நகரமயமாக்கல், விவசாய நிலங்களில் ரசாயனப் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வண்ணத்துப்பூச்சி இனங்கள் அருகி வருகின்றன. வண்ணத்துப்பூச்சி இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதன் எண்ணிக்கையை பெருக்கவும் ரூ.8 கோடி மதிப்பில், ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவை தமிழக அரசு 2014-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் மேலூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைத்தது.

இது வெப்ப மண்டல வண்ணத்துப்பூச்சி காப்பகமாகவும் உள்ளது.தமிழக அரசின் வனத் துறையின் பராமரிப்பு, மேற்பார்வையில் உள்ள இப்பூங்காவில் வண்ணத்துப்பூச்சி இனங்கள் இனப்பெருக்கம் செய்யும் தாவரங்கள், உண்ணும் தாவர வகைகள் என 300-க்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சிகள் எப்படி உருவாகின்றன, மகரந்த சேர்க்கை நிகழ்தல் ஆகியவற்றை விளக்கும் ‘ஆம்பி தியேட்டர்’ உள்ளது. தவிர, இப்பூங்காவில் சிறுவர் விளையாட்டு பூங்கா, சிறு பாலங்கள், சிறுவர்களுக்கான படகுகள் இயக்கும் குளம், வெட்டுக்கிளி, பட்டாம்பூச்சிகள், வண்டுகள் மொய்க்கும் கல் மரம், நட்சத்திர வனம், ராசி வனம், புழுக்கூண்டு என பார்ப்பவர்களை வியக்க வைக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பூங்காவுக்கு பொழுது போக்குக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் ஆண்டுதோறும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் திருச்சி வனக்கோட்டம், வனத்துறையின் கீழ் இயங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவானது பராமரிப்பு பணிக்காக பிரதி செவ்வாய் வார விடுமுறை அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் ஜனவரி 16ம் தேதி மாட்டுப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா திறக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம் என திருச்சி மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story