அரசு ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்!

அரசு ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2024 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2024 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2024 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் மாதம், 7ம் தேதி, உரிய சான்றுகளுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தை அணுகவும். மோட்டார் வாகனம், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம், மின்னணுவியல், மெக்கானிக் மற்றும் எலக்ட்ரிக் வண்டி ஆகிய தொழில் பிரிவு படிப்புகளுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேசன் மற்றும் 'இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ்' டிஜிட்டல் மேனு பேக்சரிங் டெக்னிசியன் ஆகிய இரு ஓராண்டு பயிற்சிக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, 750 மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச சைக்கிள், மடிக்கணினி, இரண்டு செட் சீருடைக்கான துணி, தையற்கூலி, இலவச புத்தகங்கள், இலவச சேப்டி ஷீ, இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.

Tags

Next Story