சாராயத்தை குடித்து வயிறு புண்ணாக்காமல் கள்ளை குடிக்கலாமே-அண்ணாமலை

சாராயத்தை குடித்து வயிறு புண்ணாக்காமல் கள்ளை குடிக்கலாமே-அண்ணாமலை
பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை
அனைத்து டாஸ்மாக் கடைகளை மூடவே அரசியலுக்கு வந்து இருக்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை தமிழக கேரள எல்லையான கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் பா.ஜ.க மக்களவை வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர் ஆனைகட்டி பகுதியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடுகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தும் பகுதிகளில் இந்த பகுதியும் ஒன்று என தெரிவித்தார்.

இந்த பகுதிக்கு வரக்கூடிய நிதி அனைத்தும் மத்திய அரசு நிதி என தெரிவித்த அவர் இந்த பகுதியில் மலைவாழ் குழந்தைகளுக்கு ஏகலைவா பள்ளிகள் கொண்டு வரவேண்டும், மலைவாழ் குழந்தைள் இருக்கும் எல்லா பகுதிகளில் ஏகலைவா பள்ளிகளை அதிகம் கொண்டு வர வேண்டும் என தெளிவாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

மலைவாழ் மக்களுக்கு வீடு,சிலிண்டர் என மத்திய அரசின் சலுகைகள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் எனவும் வரும் ஏப் 19 தேதி தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் 3வது முறையாக பிரதமராக மோடி அமர வேண்டும் எனவும் தெரிவித்தார் பிரதமர் மோடி வந்தவுடன்தான் மழைவாழ் மக்களுக்கு தேவையான ரோடு வசதிகள் போன்றவை வழங்கப்படுகின்றது என தெரிவித்த அவர் 100 சதவீத திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

செங்கல் சூளையில் மண் எடுப்பதில் பிரச்சினை இங்கே இருக்கின்றது என தெரிவித்த அவர் திமுக குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றது எனவும்,இவர்களே பிரச்சினையை துவங்கி விட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள் எடுப்பதாக சொல்லுவார்கள் எனவும் இந்த பிரச்சினைக்கு சுற்றுசுழல் அமைச்சரிடம் பேசி தீர்வுகாண வேண்டும் என தெரிவித்தார்மக்கள் வாழ்வாதாரம்பாதிக்காமல் இயற்கைக்கு பதிப்பு இல்லாமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும்இது போன்ற பகுதிகளை தேடி அடுத்த 10 ஆண்டுகளில் அனைவரும் வருவார்கள் என்றார்.

இந்த பகுதி பொழிவாகவும் இருக்க வேண்டும் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். பழங்குடி மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் மரியாதை இருந்தது.ஆனால் அரசியல் அதிகாரம் பாஜக வழங்கி திரௌபதி முர்முவை குடியரசு தலைவராக்கி இருக்கின்றோம் என தெரிவித்த அவர்மோடி பழங்குடி மக்களுக்கு பாதுகாவலனாக இருக்கின்றார் எனவும் தெரிவத்தார்.இந்த பகுதியில் மனித விலங்கு மோதலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்த அவர் இந்தக் ஒரு வண்டி மட்டும்தான் டெல்லி போகும், மற்றது எல்லாம் லோக்கல் வண்டி எனவும் தெரிவித்தார்.டெல்லிக்கு போகுற ஓரே வண்டி இந்த வண்டிதான் என தெரிவித்தார்.

இங்கு இருக்கும் டாஸ்மாக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இந்த ஒரு டாஸ்மாக்கை எடுப்பது மட்டும் வேலையல்ல எல்லா டாஸ்மாக்யும் எடுக்க அரசியலுக்கு வந்து இருக்கின்றோம் என தெரிவித்த அவர் இந்த குடியினால் எல்லாருக்கும் பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவித்தார். ஜனநாயகத்தில் குடிக்க கூடாது என்று சொல்ல வில்லை உங்களுடன் இருக்கின்றேன் சாராயத்தை குடித்து வயிற்றை புண்ணாக்கி கொள்ளாலமல் கள்ளை குடியுங்கள் எனவும் கேரளாவில் அப்படித்தான் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

ஆனைகட்டி பகுதியில் திமுக நம்மை விலை பேசி விடலாம் என நினைக்கின்றனர் அதை நாம் உடைத்து ஏறிய வேண்டும் எனவும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags

Next Story