நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளா்கள் எவ்வளவு தெரியுமா?

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளா்கள் எவ்வளவு தெரியுமா?

நாமக்கல்லில் 6 தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்கள் - 7,08,317, பெண் வாக்காளா்கள் - 7,44,087 உட்பட மொத்தம் 14,52,562 பேர் உள்ளனர்.

நாமக்கல்லில் 6 தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்கள் - 7,08,317, பெண் வாக்காளா்கள் - 7,44,087 உட்பட மொத்தம் 14,52,562 பேர் உள்ளனர்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தோ்தல் இறுதி நிலவரப்படி 14,52,562 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். புதிதாக 8,526 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். நாமக்கல் மக்களவைத் தொகுதியில், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (பழங்குடியினர்), நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், சங்ககிரி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா மாவட்ட அளவிலும், மக்களவைத் தொகுதி அளவிலும் இறுதிப் பட்டியலை வெளியிட்டாா். அதன்பிறகு இரண்டு மாதங்கள் புதிய வாக்காளா்கள் சோ்க்கும் பணி நடைபெற்று வந்தது.

மாா்ச் 27-இல் தோ்தலில் வாக்களிக்க உள்ளோா் எண்ணிக்கை குறித்த இறுதிப் பட்டியல் வெளியானது. அந்தப் பட்டியல் விவரம்: ராசிபுரம் (தனி): ஆண் வாக்காளா்கள் - 1,12,291, பெண் வாக்காளா்கள் - 1,18,286, இதரவை - 7, மொத்தம் - 2,30,584. சேந்தமங்கலம் (ப.கு.): ஆண் வாக்காளா்கள் - 1,19,052, பெண் வாக்காளா்கள் - 1,25,034, இதரவை - 27, மொத்தம் - 2,44,113. நாமக்கல்: ஆண் வாக்காளா்கள் - 1,24,086, பெண் வாக்காளா்கள் - 1,33,780, இதரவை - 49, மொத்தம் - 2,57,915. பரமத்தி வேலூா்: ஆண் வாக்காளா்கள் - 1,05,359, பெண் வாக்காளா்கள் - 1,14,899, இதரவை - 7, மொத்தம் - 2,20,265. திருச்செங்கோடு: ஆண் வாக்காளா்கள் - 1,11,659, பெண் வாக்காளா்கள் - 1,18,707, இதரவை - 49, மொத்தம் - 2,30,415. சங்ககிரி: ஆண் வாக்காளா்கள் - 1,35,870, பெண் வாக்காளா்கள் - 1,33,381, இதரவை - 19, மொத்தம் - 2,69,270. 6 தொகுதிகளிலும் மொத்த வாக்காளா் எண்ணிக்கை: ஆண் வாக்காளா்கள் - 7,08,317, பெண் வாக்காளா்கள் - 7,44,087, இதரவை - 158, மொத்தம் - 14,52,562.

இத்தொகுதிகளில் 751 இடங்களில் 1,661 வாக்குச் சாவடிகள் உள்ளன. நாமக்கல் மாவட்ட அளவில் குமாரபாளையம் தொகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதியுடன் உள்ளது. இங்கு, ஆண் வாக்காளா்கள் -1,25,352, பெண் வாக்காளா்கள் - 1,32,291, இதரவை - 61, மொத்தம் - 2,57,704. மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளா்கள் - 6,97,799, பெண் வாக்காளா்கள் - 7,42,997, இதரவை - 200, மொத்தம் - 14,40,996. மாவட்ட அளவில் 8,689 வாக்காளா்களும், மக்களவைத் தொகுதி அளவில் 8,526 வாக்காளா்களும் கூடுதலாக இடம் பெற்றுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட தோ்தலில் மேற்கண்ட வாக்காளா்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்த உள்ளனா்.

Tags

Next Story