மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு
பைல் படம்
வெள்ளிச்சந்தை அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே அருகே ஈத்தாங்கடை பகுதியை சேர்ந்தவர் விக்ரமன். கூலித் தொழிலாளி. இவரது மூத்த மகள் தனு (21). நாகர்கோவில் உள்ள ஒரு ரத்த வங்கியில் பணியாற்றி வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர் அவரது செல்ஃபோன் சார்ஜ் போடுவதற்காக ஸ்விட்ச் போர்டில் ஏற்கனவே மாட்டப்பட்டிருந்த பிளக்கினை உருவி உள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தனு தூக்கி வீசப்பட்டார். உறவினர்கள் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது தனுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து அவரது தாயார் அம்பிகா என்பவர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story