இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

இளம் சாதனையாளர்களுக்கு கல்வி உதவி தொகை 

மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும் என்று கலெக்டர் கார்மேகம் கூறியுள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2023-24-ம் ஆண்டிற்கு தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 93 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் பதிவு செய்து 2023-24 -ம் ஆண்டிற்கான விண்ணப்பித்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள், முறையே 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை (https://scholarships.gov.in) மூலம் தெரிந்து கொள்ளவும் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story