பைக் - கார் மோதி தீ பிடித்ததில் மாணவன்  கருகி பலி 

கன்னியாகுமரியில் இரு சக்கர வாகனத்துடன் கார் மோதி தீப்பற்றியதில் சிறுவன் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் கோபி (39) பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் காரில் மதியம் சங்கத்துறை கடற்கரைக்கு சென்றனர். காரை கோபி ஓட்டி சென்றார். கார் சென்று கொண்டிருந்தபோது தெற்கு சூரங்குடி பள்ளி தெருவை சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவர் மகன் அஜாஸ் (15) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோபி ஓட்டி வந்த கார் அஜாஸ் பைக் மீது மோதி மோதியது.

ஆனால் கோபி பதற்றத்தில் காரை நிறுத்தவில்லை. மேலும் வேகமாக 3 கிலோ மீட்டர் தூரம் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதில் காரின் முன்பகுதியில் சிக்கிய பைக்கும் சிறுவனுமாக இழுத்து செல்லப்பட்டுள்ளது.

பொதுமக்கள் துரத்தியும் மீண்டும் காரை அதிவேகமாக ஓட்டிசென்ற போது திடீரென கார் தீ பிடித்தது. அப்போது கோபி மனைவி மற்றும் குழந்தைகள் அவசரமாக வெளியேறி தப்பினர். இந்த நிலையில் அந்த பகுதியில் கூடி வந்த மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப் வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

அதற்கு கார் முற்றிலும் எரிந்ததுடன், காரின் முன் பைக் உடன் சிக்கிய சிறுவன் உடலும் கருதியது. பின்னர் போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குமரி மாவட்டத்தில் நடந்த இந்த கோர விபத்து பெரும் பரடரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story