“ இளம் வடிவமைப்பாளர் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு

“ இளம் வடிவமைப்பாளர் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு

“ இளம் வடிவமைப்பாளர் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ச.உமா தகவல்

“ இளம் வடிவமைப்பாளர் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ச.உமா தகவல்

தமிழ்நாடு அரசு மாநில அளவிலான சிறந்த “ இளம் வடிவமைப்பாளர் விருது” வழங்கும் பொருட்டு சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வடிவமைப்பாளர்களில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.1,00,000/-, ரூ.75,000/- மற்றும் ரூ.50,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேற்டி விருதுக்கான வழிகாட்டுதல்கள், வடிவமைப்பு நுழைவுப் படிவம், தகுதிகள், தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் வடிவமைப்பை அனுப்ப வேண்டிய முகவரியின் விபரங்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் காணலாம்.

மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் பங்கேற்க ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பங்கள் 10.12.2023ம் தேதிக்கு முன், உதவி இயக்குநர், கைத்தறித் துறை, நாமக்கல் அலுவலகத்தில் கீழ்காணும் முகவரியில் சமர்ப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார். அலுவலக முகவரி உதவி இயக்குநர் அலுவலகம், கைத்தறி துறை, (திருச்செங்கோடு சரகம்) ஈ.காட்டூர், எலந்தகுட்டை அஞ்சல்-638 008. நாமக்கல் மாவட்டம். அலைபேசி எண்.9750044550

Tags

Read MoreRead Less
Next Story