இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
தென்காசி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் , செங்கோட்டை பகுதியில் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் இவரின் மனைவி உச்சிமாகாளி (36) இவர் தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டதாக தெரிகிறது. இதில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மன்னனை ஊற்றி தீக்குளித்ததால் பலத்த காயம் ஏற்பட்டது ,
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் இளம் பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story