விராலிமலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!



பைல் படம்
விராலிமலை அருகே கணவர் இல்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விராலிமலை அருகே கணவர் இல்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். விராலிமலை அருகேயுள்ள சரளபட்டியைச் சேர்ந்த ஏழுமலை மனைவி அஞ்சுகா தேவி (35). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன் ஏழுமலை இறந்துவிட்டார். அப்போது முதல் விரக்தியில் இருந்து வந்த அஞ்சுகாதேவி கடந்த 24ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சேலையால் வீட்டின் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின்பேரில், விராலிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story



