இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்!

இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்!

இளம்பெண் மாயம்

தூத்துக்குடியில் கணவரிடம் கோபித்துக் கொண்டு மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி அனிதா (23). இவர் சம்பவத்தன்று கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து சீனிவாசன் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம். இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story