இளம்பெண்கள் செல்போனில் மூழ்கி ஏமாற கூடாது: ராதிகா பேச்ச
நிகழ்ச்சியில் பேசும் நடிகை ராதிகா
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம், நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாராயணி அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகளும் பங்கேற்றனர்.
மேலும் நீரிழிவு நோய் விழிப்புணர்வு கையேட்டினையும் ராதிகா வெளியிட்டார் நிகழ்ச்சிக்கு பிரபல நடிகையும் சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவருமான ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சக்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில் நீரிழிவு நோய் திடீரென வந்த நோய் அதனை வருமுன் காக்க மருத்துவர்கள் பரிந்துரைபடி முறையான உணவு எடுத்துகொள்ள வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்ற போது அங்கு இருந்த டாக்டர்கள் என்னை பரிசோதித்து விட்டு உங்களுடைய தாய் தந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதோ நீங்கள் கர்ப்பிணியாக இருப்பதால் உங்களுக்கும் சர்க்கரை வியாதி வர வாய்ப்பு உள்ளது எனக் கூறி மருந்து கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மருந்தை பிரித்து பார்த்த போது வேப்பிலை சாறு இருந்தது நம் வீட்டிலேயே இருக்கும் வேப்பிலை சாறை 300 டாலர் கொடுத்து வாங்கும் விலை வந்தது நமது ஊரில் வீட்டுக்கு முன் இருக்கும் மரத்தை நாம் பயன்படுத்துவதில்லை ஆனால் அவர்கள் மருந்தாக பயன்படுத்துகின்றனர். மார்க்கெட் செய்து விற்பனை செய்து வருகின்றனர் நாம் சரியான உணவு வகைகளை பயன்படுத்த வேண்டும்.
அந்த உணவுகளை யோசித்து சாப்பிட வேண்டும். சீரியல் பார்த்தாலும் சுகர் வரும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் தேர்தல் காலங்களில் தெரு தெருவாக பிரச்சாரம் செய்ததற்கு பதிலாக சர்க்கரை வியாதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் மேலும் பிக்பாசை பார்க்கின்றனர் அதில் ஒருவரை ஒருவர் திட்டிகொள்வது தான் நடக்கிறது அதனைப் பார்த்து நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
மேலும் யாரையும் நம்பி கைபேசியில் பேசி காதலில் மூழ்கி ஏமாறாதீர்கள் மேலும் பெண்கள் சுய நலமற்றவர்கள் இருப்பினும் தங்களின் உடல் நலனிலும் அக்கறையை செலுத்த வேண்டும் மாதம் ஒரு முறையாவது ரத்தம் மற்றும் முழு உடற்பரிசோதனையை செய்து உங்களின் உடல் நலனில் அக்கறையை செலுத்துங்கள் என பேசினார்.