கொடைக்கானல் ஏரியில் குதித்த இளைஞரால் பரபரப்பு

செல்போன் தண்ணீரில் விழுந்ததாக கூறி கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப்பயணி ஒருவர் குதித்ததால் பரபரப்பு உண்டானது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்து உள்ளது,இந்த ஏரியில் நகராட்சி சார்பில் ஒரு படகு குழாமும்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் 2 படகு குழாமும் உள்ளது,கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வது வழக்கம்,இந்நிலையில் நேற்று வார விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது,

இதனை தொடர்ந்து நேற்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் செயல்படும் படகு குழாமில் சுற்றுலாப்பயணிகள் இரண்டு படகினை வாடகைக்கு எடுத்து ஏரிக்குள் சென்றுள்ளனர்,இதில் படகில் சென்ற சுற்றுலாப்பயணிகளில் ஒருவர் ஏரியில் குதித்து தத்தளித்து மீண்டும் படகில் ஏறி சென்றுள்ளார்,இதனை தொடர்ந்து தங்களது படகு சவாரி முடிந்தவுடன் படகை படகு குழாமில் சுற்றுலா பயணிகள் விடும் பொழுது சுற்றுலாப்பயணி தண்ணீரில் நனைந்ததையடுத்து படகு குழாம் ஊழியர்கள் இது குறித்து கேட்டுள்ளனர், அப்போது செல்போன் தவறி விழுந்ததாகவும்,செல்போன் தவறி விழும் போது பிடிக்கும் போது தண்ணீரில் நனைந்ததாக தெரிவித்து நைசாக நழுவி சென்றுள்ளனர்,

இந்நிலையில் ஏரியில் சுற்றுலாப்பயணி குதித்து மீண்டும் படகில் ஏறும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து படகு குழாம் மேலாளர் இது குறித்து விசாரணை மேற்கொள்வதாகவும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் சுற்றுலாப்பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story