கள் அருந்திய படி இளைஞர்கள் அபாய குளியல்

கள் அருந்திய படி இளைஞர்கள் அபாய குளியல்
இளைஞர்கள் அபாய குளியல்
பாலாற்றுப் படுகையில் கள் அருந்திய படி இளைஞர்கள் அபாய குளியல்
செங்கல்பட்டு மாவட்டம்,கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் இடையே, பாலாற்றுப் படுகை உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், வடகிழக்கு பருவகால கனமழை பெய்தால் மட்டும், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். கடந்த 2019 இறுதியில், பொதுப்பணித்துறை, அணுசக்தி துறை நிதியில், நீர்செறிவூட்டல் தடுப்பணை அமைத்தது. அதைத்தொடர்ந்து, மழையின்போது தடுப்பணை பகுதியில் நீர் நிரம்பி, பல மாதங்களுக்கு பரந்த நீர்ப்பரப்பாக காணப்படும். புதுச்சேரி சாலையை ஒட்டி, தடுப்பணை நீர்த்தேக்கம் உள்ள நிலையில், இவ்வழியே செல்வோர் தடுப்பணை பகுதிக்கு சென்று, நீர்ப்பரப்பை கண்டு ரசிக்கின்றனர். அதில் ஆர்வத்துடன் குளிக்கின்றனர். பனை கள் உற்பத்தியாக அறியப்பட்ட கூவத்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கள் விற்பனை தற்போது அமோகமாக நடக்கிறது. சென்னை உள்ளிட்ட பகுதியினர், கள் அருந்த அங்கு படையெடுத்து வருகின்றனர். வாலிபர்கள் குழுவாக சென்று, பிளாஸ்டிக் கேன்களில் கள் வாங்கியும், டாஸ்மாக்கில் மது வாங்கியும் வந்து, தடுப்பணையில் அமர்ந்து அருந்துகின்றனர். போதையில் அணையில் இறங்கி குளிக்கின்றனர். அதிக போதை மயக்கம் காரணமாக, நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. சதுரங்கப்பட்டினம் மற்றும் கூவத்துார் போலீசார், தடுப்பணையில் வாலிபர்கள் மது, கள் அருந்துவதை தடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story