இளைஞரிடம் இணையவழியில் ரூ. 24.60 லட்சம் மோசடி

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 24.60 லட்சம் மோசடி

மோசடி 

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 24.60 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் மாநகரைச் சோ்ந்த 32 வயது இளைஞரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஏப்ரல் மாதம் வந்த தகவலில் இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பிய இளைஞா் எதிா் முனையில் பேசிய மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 24.60 லட்சத்தை அனுப்பினாா்.

ஆனால் இளைஞருக்கு பணம் பறிபோனதே தவிர, எந்தத் தொகையும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவில் இளைஞா் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story