வருமானவரித்துறையில் இருந்து வரோம் - இளம்பெண்ணிடம் பணம் பறிப்பு

வருமானவரித்துறையில் இருந்து வரோம் - இளம்பெண்ணிடம் பணம் பறிப்பு

வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி பெண்ணிடம் பணம் பறித்த இளம் பெண் கைது

வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி பெண்ணிடம் பணம் பறித்த இளம் பெண் கைது

ஓசூர் பொதிகை நகரை சேர்ந்தவர் ஸ்ருதிலயா, இவர் ஓசூர் ரயில் நிலையம் அருகே ஸ்ருதியா அசோசியட்ஸ் என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்திற்கு வந்த இளம் பெண் ஒருவர் அலுவலகத்தில் இருந்த ஸ்ருதிலயாவிடம் தான் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாகவும், நீங்கள் ஒருவரிடம் போலியான பான்கார்டு கொடுத்து ஏமாற்றி உள்ளதால் உங்கள் அலுவலகத்தை மூடி விடுவோம் எனக்கூறி ஸ்ருதிலயாவிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த அவர் அந்த இளம் பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அந்த பெண் மீது சந்தேகம் அடைந்த ஸ்ருதிலயா இதுகுறித்து ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணையில், வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி ஸ்ருதிலயாவிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறித்த இளம் பெண் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீபா என்பதும் இவர் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இசேவை மையம் நடத்தி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து தீபாவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story