கடலில் குதித்து இளம் பெண் தற்கொலை முயற்சி

கடலில் குதித்து இளம் பெண் தற்கொலை முயற்சி

விசாரணை

குளச்சல் அருகே கடலில் குதித்து இளம் பெண் தற்கொலை முயற்சி.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதிக்கு வந்த இளம் பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்தது. குளச்சல் கடற்கரையில் தினமும் பொதுமக்கள் பொழுது போக்குக்கு வந்து செல்வது வழக்கம். இங்குள்ள மணற் பரப்பில் அமர்ந்து மாலையில் சூரியன் மறையும் காட்சி பார்த்து ரசிப்பார்கள். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் 33 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் குளச்சல் துறைமுக பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். பின்னர் ஸ்கூட்டரை பாலத்தில் நிறுத்திவிட்டு, கடலை நோக்கி நடந்து சென்றார். அந்த இளம் பெண் கடலுக்குள் பாய்ந்து சென்று இடுப்பளவு தண்ணீரில் முன்னோக்கி சென்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். அப்போது அங்கு இருந்த மீனவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த மரைன் போலீசருக்கு தகவல் அளித்து, அதன் பேரில் போலீசார் உடனே கடலில் குதித்து இளம்பண்ணை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் கருங்கல் பகுதியை சேர்ந்த சுஜாதா என்பது தெரிய வந்தது. இவரது கணவர் சதீசன். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5ஆண்டுகள் ஆகிறது எனவும், குழந்தைகள் இல்லை எனவும், குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்ததாகவும் தெரிய வந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த சுஜாதா தற்கொலை செய்யும் நோக்கத்துடன் குளச்சல் வந்து கடலில் குதித்ததாக தெரிவித்தார். குளச்சல் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story