மாங்கோட்டில் தீக்குளித்து இறந்த இளம் பெண்: சகோதரி வீடியோ வெளியீடு
இறந்த இளம்பெண்
கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு பகுதியில் தீக்குளித்து இறந்த இளம் பெண்ணின் சகோதரி திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தனது சகோதரி தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.
இது குறித்து அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, பொன்னரக்கல் மூவோட்டு கோணம் பகுதி யில் எங்களது குடும்ப சொத்தாக 15 சென்ட் ரப்பர் தோட்டம் உள்ளது. அக்காவை திருமணம் செய்யும்போது எந்தவித வரதட்சணை யும் தேவையில்லை என்று கூறிவிட்டு திருமணம் முடிந்த பின்பு கணவரின் குடும்பத்தார் நிலத்தை எழுதி வாங்கக்கூறி பலமுறைஅக்காவை கொடுமைப்படுத்தினர். கடந்த ஒரு சில வாரங்களாக வீட்டில் பல பிரச்னைகள் நடப்பதாக தீபா என்னிடம் செல்போனில் கூறினார். என்னு டைய அக்காவை உளவியல் ரீதியாக பல கொடுமைகளுக்கு உட்படுத்திய தோடு, குழந்தையை காரணம் காட்டி அக்காவை அடித்ததும் எனக்கு தெரியும். பலமுறை அக்கா செலவுக்காக எங்களிடம் காசு கேட்டு வாங்கி இருக்கிறார்.
செல வுக்கு கூட கணவர் வீட்டார் பணம் தரவில்லையோ என நினைக்க தோன்றுகிறது. நேற்று முன்தினம் எங்கள் வீட்டிற்கு வருவ தற்காக எனது அக்கா துணிகளை பேக்கில் எடுத்து வைத்துள்ளார். அப்படி இருக்கையில் அவர் திடீரென்று தற்கொலை செய்ததாக கூறுவது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
அக்கா எப்போதும் குழந்தையை தன்னுடனே வைத்திருப்பாள். ஆனால் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அங்கு குழந்தை இல்லை. எனது அக்கா குழந்தையை விட்டு விட்டு தனியாக தற்கொலை செய்யவும் வாய்ப்பு இருக்காது. அக்காவின் உடலை கணவர் வீட்டாரிடம் கொடுக்க மாட்டோம். தீபாவின் குழந்தையை நாங் கள் வளர்க்கப் போகிறோம்.
காவல் துறையினர் இந்த வழக்கில் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கெஞ் சியபடியே வீடியோ பதிவில் திவ்யா பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனால் போலீ சாரின் விசாரணை வேறு கோணத்திலும் தொடங்கி உள்ளனர்.