இளம்பென் தற்கொலை – கோட்டாச்சிரியர் விசாரணை
இளம்பெண் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் இருவப்பபுரம் பகுதியில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராற்றில் மன உளைச்சலில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜா மனைவி சித்ராதேவி (25). இந்த தம்பதியருக்கு கடந்த 2018ல் திருமணம் நடந்துள்ளது. 2 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் சித்ரா தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சித்ரா தேவி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலையத்தில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் வழக்குப் பதிவு செய்துள்ளார். தூத்துக்குடி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story