உயர் கல்வி படிக்க முடியாததால் இளம் பெண் தற்கொலை

உயர் கல்வி படிக்க முடியாததால் இளம் பெண் தற்கொலை

தற்கொலை 

பங்குநத்தம் கிராமத்தில் உயர் கல்வி படிக்க முடியாததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இண்டூர் அருகே பங்குநத்தம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் அபிநயா இவர் பிளஸ்-2 முடித்து விட்டு தர்மபுரியில் ஒரு மையத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்தார். அப்போது தான், என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், நம்மிடம் வசதி இல்லை. எனவே கலை அறிவியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். இதில் அபிநயா மனம் உடைந்து காணப்பட்டாராம். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபிநயா மின்விசிறியில் நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்த இண்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அபிநயா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிநயா தற்கொலைக்கு வேறு காரணம் இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story