தர்மபுரி: இளம்பெண் தற்கொலை - காவல்துறை விசாரணை
பட்டதாரி பெண் தற்கொலை
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்குட்பட்ட மோது குளஅள்ளி பகுதியை சார்ந்தவர் முனுசாமி. இவரது மகள் லட் சுமிபிரியா பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதுபற்றி நேற்று இரவு பெற்றோர் பேசியபோது, லட்சுமிபிரியா தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றும், மேற்படிப்பு படிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், படிக்க வைக்க தங்களுக்கு போதிய அளவில் பண வசதி இல்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட லட்சுமிபிரியா, இரவு தூங்கச்சென்றார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் மகள் எழுந்து வராததால் சந்தேகமடைந்த பெற்றோர். அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலக்கோடு காவல்துறையினர் லட்சுமி பிரியாவின் உடலை கைப்பற்றி, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.