கல்லூரி மாணவி தற்கொலை - காவல்துறையினர் விசாரணை

கல்லூரி மாணவி தற்கொலை - காவல்துறையினர் விசாரணை
X
தற்கொலை
தர்மபுரியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் கிருத்திகா காரிமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சவுளூரை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இவரது காதல் குறித்து கிருத்திகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து பெற்றோர்கள் கிருத்திகாவிற்கு அறிவுரை கூறி கல்லூரி படிப்பு முடித்த பிறகு திருமணம் பற்றி பேசலாம் என பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

இதனால், காதலனை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் கிருத்திகா இருந்துள்ளார். இதற்காக அவர் மனநல மருத்துவரிட மும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த அவர் திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story