இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

காவல் நிலையம் 

கரூர் அருகே வடக்கு காந்திகிராமத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்பாத இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வீரியம்பாளையம் அருகே உள்ள குமட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் மகள் தேன்மொழி வயது 21. தேன்மொழிக்கு திருமணம் செய்வதற்காக அவரது தாயார் புனிதா வயது 43 என்பவர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். மேலும், இது குறித்து தேன்மொழியிடம் பேசியுள்ளார். ஆனால், தேன்மொழி திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்னிலையில், ஜூன் 8-ம் தேதி காலை 10:30 மணி அளவில் தேன்மொழி, கரூரை அடுத்துள்ள வடக்கு காந்திகிராமத்தில் அவரது உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அங்கு சிகிச்சையில் இருந்து வந்த தேன்மொழி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து புனிதா காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த தேன்மொழியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story