தச்சநல்லூரில் இளைஞர் தற்கொலை

X
காவல் நிலையம்
King 24X7 Website |10 Dec 2023 8:54 PM ISTதச்சநல்லூரில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் இனாம் தேநீர்குளத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மாரிமுத்து.இவரின் மகன் நவீன் (17) ஐடிஐயில் படித்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.இந்த நிலையில் இவர் நேற்று உடலில் பெட்ரோல் ஊத்திக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story
