சர்பிங் பயிற்சியில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்
மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் சர்பிங் பயிற்சியில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் சர்பிங் பயிற்சியில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில், கடலில் அலை சறுக்கும் 'சர்பிங்' விளையாட்டு பிரசித்தி பெற்றது. சுற்றுலா இடமான மாமல்லபுரத்தில், இவ்விளையாட்டில் இளைஞர்கள் பயிற்சி பெற ஆர்வம் காட்டுகின்றனர். கடல்நீர் பரப்பில், குறுகிய பலகையில் சாகசமாக நின்று, கைகள், கால்கள், உடல் நெளித்து, கீழே விழாமல், அலையில் சிக்காமல், அலையின் மீது சறுக்குவதே 'சர்பிங்' விளையாட்டு. துவக்கத்தில், மீனவ இளைஞர்களே பயிற்சி பெற்று தேர்ந்தனர். தமிழகம், பிற இடங்களில் நடக்கும் 'சர்பிங்' விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். தற்போது, பிறருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், சுற்றுலா பயணியர், ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர். இவ்விளையாட்டு, மனோதிடம், உடல் வலிமை, புத்துணர்ச்சி, புதிய அனுபவம் அளிப்பதாக, பயிற்சி பெறுவோர் தெரிவித்தனர்.
Next Story