விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.

விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.

கஞ்சா விற்ற இளைஞர் கைது 

விழுப்புரம் போலீசார் ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனை செய்த இளைஞரை கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக பையுடன் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் அருண்குமார் (வயது 25) என்பதும், இவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


Tags

Next Story