கருங்கலில் வாகன தணிக்கை செய்த உதவி ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது
காவல் நிலையம்
கருங்கல் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் கருங்கல் தலைமை தபால் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது பைக்கில் வந்த வாலிபர், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ராஜன் மீது மோதி பைக்கை நிறுத்தியுள்ளார். அதனைக் தட்டி கேட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜனை அவதூறாக பேசி, சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.சக போலீசார் தப்பிச் செல்ல முயன்ற அந்த வாலிபரை பிடித்து கருங்கல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் முளகுமூடு அருகே வெள்ளிகோடு பகுதியை சேர்ந்த டென்னீஸ் சேவியர் ராஜ் மகன் டெரின் என்பதும், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.இது பற்றி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் டெரின் மீது அவதூறாக பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது. கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் டெரினை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர்.