நீதிமன்ற பெண் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

நீதிமன்ற பெண் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

நீதிமன்ற பெண் ஊழியர் மீது தாக்குதல்

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் நீதிமன்ற பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் நேரு. இவருடைய மகன் ஸ்ரீராம் (வயது 27). சேலம் வின்சென்ட் பகுதியை சேர்ந்த 24 வயது பெண் சேலம் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பெண் ஊழியர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கோர்ட்டு அருகே உள்ள சாலைக்கு வந்தார். அப்போது திடீரென ஸ்ரீராம் இளம்பெண்ணை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

அதற்கு அந்த பெண் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணை தாக்கினார். இதில் காயம் அடைந்த இளம்பெண் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அப்பெண் அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து கோர்ட்டு பெண் ஊழியரை தாக்கிய ஸ்ரீராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story