டாஸ்மார்க் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

டாஸ்மார்க் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தண்டலைப்புத்தூரில் டாஸ்மார்க் கடையில் பணிபுரிந்த ஊழியரை கைகளால் தாக்கி பீர் பாட்டிலை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கண்ணனூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் 46 வயதான பெருமாள்.இவர் தண்டலைப்புத்தூரில் உள்ள அரசு மதுபான கடையில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல் முசிறி அருகே ஜெயங்கொண்டான் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான ரஞ்சித். இவருக்கும் டாஸ்மார்க் கடை பணியாளருக்கும் வாய்த் தகராறில் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது இந்நிலையில் நேற்று டாஸ்மார்க் கடைக்கு .சென்ற ரஞ்சித் அங்கு பணியில் இருந்த பெருமாளுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ரஞ்சித் பெருமாளை கைகளால் தாக்கி பீர் பாட்டிலை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பெருமாள் முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story