செல்போன் திருட்டு - இளைஞர் கைது

செல்போன் திருட்டு - இளைஞர் கைது

செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்

தடுப்பணையில் குளிக்கச் சென்றவர்களின் செல்போன்களை களவாடிய இளைஞர் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து செல்போங்களை பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ராஜபுரம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கதிர் வயது 19. இவர் ஜனவரி 3ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் இவரது நண்பர்கள் உடன் அருகில் உள்ள கொத்தப்பாளையம் தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் உடன் எடுத்துச் சென்ற ஏழு செல்ப் போன்களை கரையில் வைத்து விட்டு, குளித்துவிட்டு மீண்டும் 3 மணி அளவில் வீடு திரும்பும் போது, அவர்கள் வைத்த செல்போன்கள் களவாடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

எனவே, இது குறித்து கதிர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டர் காவல்துறையினர். மேலும், இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணபுரம், ஏர்போர்ட் நகரை சேர்ந்த சரவணன் மகன் தனுஷ் வெங்கட் வயது 19 என்பவரை கைது செய்து, களவாடிச் சென்ற ரூபாய் 81,000 மதிப்புள்ள ஏழு செல்ப்போன்களை மீட்டனர். மேலும், தனுஷ் வெங்கட் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story