போலி நகை அடகு வைத்து மோசடி செய்த வாலிபர் கைது
போலி நகை அடகு வைத்து மோசடி செய்த வாலிபர் கைது
கொல்லங்கோடு அருகே போலி நகை அடகு வைத்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பிலா விளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிரிஸ்டோபர் (50). இவர் கண்ணனாகம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த ஆறாம் தேதி இவரது கடைக்கு வந்த சுமார் 35 வயது மதிக்கத்திற்கு நபர் தனது பெயர் பிரதீப் எனக்கூறி மூன்று வளையல்களை அடகு வைத்து அதற்கு ஈடாக ரூபாய் 1.11 லட்சம் பெற்றுள்ளார். அதன் பிறகு அந்த வளையல்களை ஆய்வு செய்தபோது, அது கவரிங் நகை என தெரியவந்ததால் கொல்லங்கோடு போலீசில் ஜாண் கிறிஸ்டோபர் புகார் செய்தார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்மமானவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் களியக்காவிளை பகுதி லால் கிங்சிலி என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இதுபோன்று அந்தப் பகுதிகளில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து லட்ச கணக்கில் பணம் பெற்று தெரிய வந்தது. சுமார் 40 லட்ச ரூபாய் வரையிலும் போலி நகைகள் அடகு வைத்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் இந்த லால் கிங்சிலி வெளிநாட்டிற்கு சென்ற போது திருவனந்தபுரம் பீமா பள்ளி சேர்ந்த சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் பின்னணியில் இருந்து போலி நகைகளை கடைகளில் ஏமாற்றி அடகு வைத்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story