விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது விழுப்பு ரம் ஏரிக்கரை அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை சந் தேகத்தின்பேரில் பிடித்து சோதனையிட்டதில், அவரிடம் 50 கிராம் கஞ்சா மற்றும் 45 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில், அவர் சாலாமேடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்த காதர்அலி மகன் அசாருதீன் (வயது28) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அசாருதீனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story