குமரி அருகே இளைஞர் கைது

குமரி  அருகே இளைஞர் கைது

கஞ்சா விற்ற இளைஞர் கைது

திருவட்டார் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்றுர் அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊருக்கு வந்தார். இவருக்கு மது மற்றும் போதை பழக்கம் இருந்து வந்துள்ளது. தனது நண்பர்கள் மூலம் கேரளாவில் இருந்து கஞ்சாவை வரவைத்து அதை அவரது வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருவட்டார் உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அகஸ்டின் வீட்டை சோதனை செய்ததில் 20 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story