சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபர் கைது
சுனில்
பளுகல் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபர் கைது. மது பாட்டில்கள் பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இவற்றை கண்காணித்து வருகின்றார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பளுகல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதைத்தொடர்ந்து பளுகல் காவல் நிலைய போலீசார் பளுகல் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கல்லுபாலம் பகுதியை சேர்ந்த சுனில் என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.இது குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story