நித்திரவிளை அருகே பெண்ணின் செயின் பறித்த வாலிபர் கைது

நித்திரவிளை அருகே பெண்ணின் செயின் பறித்த வாலிபர் கைது
X
கைதான அஜின்.
இருசக்கர வாகனம் வாங்க பணம் தேவைப்பட்டதால் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வைக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாகுலேயன் மனைவி ஜலஜா (62). நேற்று காலையில் வீட்டிலிருந்து காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் நடந்து சென்ற வாலிபர் ஒருவர் திடீரென ஜலஜாவின் கழுத்தில் கடந்த இரண்டு பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். ஜலஜா சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் திருடனை விரட்டி உள்ளனர். இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நித்திரவிளை போலீசார் பொதுமக்களுடன் சேர்ந்து, வாலிபர் தப்பி போகாதவகையில் சுற்றி வளைத்து விரட்டிப் பிடித்தனர்.

வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்தபோது, அவர் சின்னத்துறை, ஜூட்ஸ் காலனி பகுதியை சேர்ந்த ஆண்டனி என்பவரின் மகன் அஜின் (19) என்பதும், அவ்வப்போது மீன்பிடித் தொழிலுக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். மேலும் பைக் வாங்க பணம் தேவைப்பட்டதால் செயின் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜினை கைது செய்து, இரண்டு பவுன் செயினையும் மீட்டனர்.

Tags

Next Story