பைக்கை திருடிய வாலிபர் கைது

பைக்கை திருடிய வாலிபர் கைது
X

கைது 

தூத்துக்குடியில் வியாபாரியின் பைக்கை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் மகன் அன்பரசன் (33). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த அவரது மோட்டார் பைக் திருடுபோய்விட்டது. இது தொடர்பாக அவர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி முனியசாமி புரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மகன் சித்திரைகுமார் (20) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து திருடப்பட்ட பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story