நூற்றாண்டு பழமையான புத்தகத்தை திருடி சென்ற இளைஞர் கைது

நூற்றாண்டு பழமையான புத்தகத்தை திருடி சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இலக்கிய திருவிழா நடைபெற்றது. இதில் பிரபல எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நீலகிரி நூலக நிர்வாகம் சார்பில் புத்தக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனை காண பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வாசகர்கள் வந்து சென்ற நிலையில் 'தி பை ரைட்ஸ் ஆப் மலபார் ' என்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தகதத்தை காணவிலை.

இதனால் அதிர்ச்சியடைந்த நீலகிரி நூலக நிர்வாகத்தினர் இது குறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் அளித்ததால் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 2 மாதத்திற்கு பிறகு நீலகிரி நூலக புத்தக கண்காட்சியில் திருடு போன புத்தகத்தை கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தப்நாத்(34) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்டு இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் வாடிக்கையாளர் ஒருவர் ரூ. 15 ஆயிரத்திற்கு விலைக்கு கேட்டும், அவர் வழங்கவில்லை இன்னும் கூடுதல் விலை கேட்பவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த பதிவை நீலகிரி நூலக நிர்வாகத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன் அது தொடர்பாக போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து பெங்களூரு சென்ற இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை கைது செய்து புத்தகத்தை மீட்டனர்.

Tags

Next Story