கோவில், மதுபான கடையில் திருடிய வாலிபர் கைது

கோவில், மதுபான கடையில் திருடிய வாலிபர் கைது

கைது 

ஏரலில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மற்றும் மதுபான கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் உள்ள மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி கோவிலில் கடந்த 12-ந் தேதி இரவு அர்ச்சகர் சங்கர பட்டர் பூஜை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். அன்று நள்ளிரவில் மர்ம நபர் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று, 2 உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்

. இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று ஏரல் அருகே உள்ள உமரிக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்ேபாது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிபட்டணம் பிபி.ஆர் காலனியை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பதும், ஏரல் சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரிய வந்தது. மேலும் அவர், கடந்த மாதம் 20-ந்தேதி மழை வெள்ளத்தில் ஏரல் அருகே உள்ள கொற்கை அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டல்களை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை ஏரல் போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story