திருப்பூரில் மூதாட்டிடம் நகை பறித்த வாலிபர் கைது

திருப்பூரில் மூதாட்டிடம் நகை பறித்த வாலிபர் கைது

நகை பறித்த இடம்

திருப்பூரில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை நல்லூர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாம்பாள் (வயது74). இவரது வீட்டிற்கு வாலிபர் ஒருவர் சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது தண்ணீர் கொடுக்க வந்த மூதாட்டி அணிந்திருந்த 9 பவுன் நகையை படித்துவிட்டு அந்த வாலிபர் தப்பி சென்றார்.

இது குறித்து நல்லூர் போலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலிசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆசாமி கோவில் வழி பகுதியில் நிற்பது தெரியவந்தது. உடனே போலிசார் அந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.

விசாரித்ததில் அவர் மதுரையை சேர்ந்த கார்த்திக் (31) என்பதும் கோவில் வழி பகுதியில் தங்கி பிரிண்டிங் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதும் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து நகையைப் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலிசார் கைது செய்தனர்...

Tags

Read MoreRead Less
Next Story